search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வெங்கய்யா நாயுடு"

    வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் சுதந்திரத்துக்காக போராடிய இந்தியர்கள் கொத்துக்கொத்தாக கொன்று குவிக்கப்பட்ட ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டு நினைவு தபால் தலை இன்று வெளியானது. #JallianwalaBagh
    சண்டிகர்:

    இந்தியப் சுதந்திர போராட்டத்தின்போது கடந்த 1919-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 13-ம் தேதி பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகரில் உள்ள ஜாலியன்வாலா பாக் பகுதியில் பொதுமக்கள் ஒன்று கூடி அமைதியான வழியில் அறப்போராட்டம் நடத்தினர்.
     
    அப்போதைய பிரிட்டன் ராணுவ ஜெனரல் டயர் உத்தரவின் பேரில் அப்பாவி பொதுமக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.

    இதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். அப்பாவி பொதுமக்களுக்கு எதிராக இயந்திர துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்ட இந்த சம்பவம் இந்திய சுதந்திர போராட்ட வரலாறில் ஒரு துயரமான நாளாகும். இந்த சம்பவம் நடந்து இன்றுடன் 100 ஆண்டுகள் நிறைவடைகிறது.



    இந்நிலையில், அமிர்தசரஸ் நகரில் இந்த கொடூர சம்பவம் நடந்த இடத்தில் அமைக்கப்பட்டுள்ள ஜாலியன்வாலா பாக் தியாகிகள் சதுக்கத்தில் துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு இன்று அஞ்சலி செலுத்தினார்.



    அங்குள்ள பார்வையாளர் புத்தகத்தில் தனது கருத்தை பதிவிட்ட துணை ஜனாதிபதி ஜாலியன்வாலா பாக் படுகொலை நூற்றாண்டு நினைவு தபால் தலைகள் மற்றும் 100 ரூபாய் நாணயங்களை வெளியிட்டார். #VicePresident #VenkaiahNaidu #JallianwalaBagh #JallianwalaBaghmemorial #JallianwalaBaghStamp 
    பாராளுமன்ற மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். #RSdeputychairman #RSdeputychairmanelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையின் சபாநாயகராக துணை ஜனாதிபதி பதவி வகிப்பது மரபாக உள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அவையின் எம்.பி.க்கள் பலத்துக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

    அறிவிக்கப்பட்ட நபரை எதிர்த்து மாற்று கட்சி வேட்பாளர் சில வேளைகளில் நிறுத்தப்பட்டு, அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்று மாநிலங்களவை துணை சபாநாயகராக பதவி ஏற்பார்.

    சில வேளைகளில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசித்து, ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராக பதவி ஏற்பதும் உண்டு.

    இப்படி, மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் அதிக முறை துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.


    இந்நிலையில், துணை சபாநாயகராக இருமுறை பதவி வகித்த பி.ஜே.குரியன் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதியுடன் முடிவடைந்தது.

    இதையடுத்டு, துணை சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் சார்பாக ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் முயற்சித்து வருகின்றன.

    இந்நிலையில், இன்றைய மாநிலங்களவை கூட்டத்தின்போது  துணை சபாநாயகர் தேர்தல் வரும் 9-ம் தேதி நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதவிக்கு பெயர்களை முன்மொழியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாமல் போனால், வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. #RSdeputychairman #RSdeputychairmanelection
    துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிற்கு கண்புரை அறுவை சிகிச்சை இன்று வெற்றிகரமாக நடைபெற்றது. #VenkaiahNaidu
    ஐதராபாத் :

    ஆந்திரப்பிரதேச மாநிலம், ஐதராபாத்தில் உள்ள எல்.வி.பிரசாத் கண் மருத்துவமனையில், துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடுவிற்கு இன்று கண்புரை அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடைபெற்றது.  பிரவீன் கிருஷ்ணா வேதவள்ளி தலைமையிலான மருத்துவர் குழு அவருக்கு அறுவை சிகிச்சை செய்தது.

    அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்த நிலையில் வெங்கய்யா நாயுடு, மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார். அவரை, 3 நாட்கள் ஓய்வில் இருக்கும்படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. #VenkaiahNaidu
    ×